அரசியலில் பரபரப்பு!...அதிமுக அதுவே அழிந்துவிடும்!...அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம்,  அம்பை-ஆலங்குளம் சாலையில் உள்ள  வடக்கு ரதவீதியில் நடைபெற்ற  அ.தி.மு.க-வின் 53-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டினை ஆண்ட கட்சி அதிமுக என்றும், அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், திமுக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து கூட்டணி கட்சிகளை தாங்கி நிற்பதாக விமர்சித்தார்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  ஒரு இயக்கத்தை அழிக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது என்றும், தலைமை பலவீனமாக இருக்கும்போது அதுவே அழிந்துவிடும் என்று கூறினார்.

மேலும், திமுக கூட்டணி உடைந்துவிடும் என்ற எடப்பாடி பழனிசாமியின் பகல் கனவு பலிக்காது என்று தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பலவீனமாக உள்ளதால் விரக்தியாக பேசி வருகிறார் என்றும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை  மாற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The excitement in politics aiadmk itself will perish minister raghupathi hit hard


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->