காங்கிரஸ்காரர்கள் போன்று ஏமாற்றுகாரர்கள் யாருமில்லை - ஜே.பி நட்டா!!
There are no cheats like Congressmen JP Natta
மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நான்கு கட்டத்தேர்தல்கள் நிறைவடைந்து ஐந்தாம் கட்டம் மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவேகம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஜெ.பி நட்டா பேசுகையில், 2014ம் ஆண்டுக்கு முன் கிராமத்தில் 2 வீடு மட்டுமே வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருந்தது. பாஜக ஆட்சியில் நாடுமுழுவதும் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. கோரோனோ தடுப்பூசி சரியில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. ஆனால், முதலில் ரகசியமாக கோரோனோ ஊசி போட்டுக்கொண்டனர். காங்கிரஸ் போன்று ஒரு ஏமாற்றுகாரர்கள் யாரும் இல்லை என்று பேசினார்.
English Summary
There are no cheats like Congressmen JP Natta