ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; விசிக சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் சந்தித்து ஆதரவு கோரினார்.

திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசனை நேரில் சந்தித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார். இதனைத் தொடர்ந்து நிபந்தனை அற்ற ஆதரவளிப்பதாக நடிகர் கமலஹாசன் அறிவித்தார்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்வதற்கு தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளார். அந்த பணிக்குழுவில் விசிக முதன்மைச் செயலாளர் பாவரசு, துணை பொது செயலாளர் கனியமுதன், விசிக மண்டல அமைப்புச் செயலாளர் கிட்டு உட்பட 14 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் திமுக  தேர்தல் பணி குழுவை அறிவித்துள்ள நிலையில் விசிகவும் தனது பங்கிற்கு தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan announced vck working committee for Erode East byelection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->