எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் வாழ்த்து! கூட்டணிக்கு துண்டு போடுகிறாரா திருமாவளவன்?!  - Seithipunal
Seithipunal


இன்று அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து இன்று திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு அவர், "பொதுச் செயலாளராக ஜெயலலிதாவிற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான். அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆனதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.  


அண்மைக்காலமாக பாஜகவிற்கும், அதிமுகவும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த கூட்டணி நிலைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த கூட்டணி உடையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.

மேலும்,  பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் திருமாவளவன் அண்மையில் விடுத்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்க வேங்கைவாசல் உள்ளிட்ட பல விவகாரங்களில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு திமுக கூட்டணியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்று கூட திருமாவளவனை திமுக.,காரர் போல பதில் சொல்லாதீங்க என்று செய்தியாளர் ஒருவர் நேரடியாகவே தாக்கி பேசியதும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஒருவேளை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, அதிமுக கூட்டணியில் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சர்களின் கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திமுக கூட்டணியிலிருந்து விசிக பிரிந்தால் அது திமுகவுக்கு தான் இழப்பு என்பதால், இந்த பக்கம் எனக்கு ஒரு கூட்டணி வாய்ப்பு இருக்கிறது என்பதை திமுகவிற்கு அடிக்கடி நினைவுபடுத்தி, வரும் தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்க திருமாவளவன் இதுபோன்ற அரசியல் தந்திரங்களை செய்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan EPS ADMK VCK election 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->