பிரபல தமிழ் பாடகி கல்பனா தற்கொலை முயற்சி! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
PlaBack Singer Kalpana Attempt Suicide
பிரபல பாடகி கல்பனா ஹைதராபாத் நகரில் உள்ள நிஜாம்பேட்டை பகுதியிலுள்ள தனது வீட்டில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (மார்ச் 4) காலை கல்பனா சுயநிலை இழந்த நிலையில் இருந்ததை அவரின் குடும்பத்தினர் கவனித்துள்ளனர். உடனடியாக அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன?
- கல்பனா தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
- அவரது குடும்பத்தினரிடம் தெலங்கானா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- மன அழுத்தம், குடும்ப பிரச்சினைகள் அல்லது தொழில்முறை சிக்கல்களா என்பதைக் காவல்துறை கண்டறிய முயன்றுவருகிறது.
பாடகி கல்பனா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளவர். அவருடைய திடீர் தற்கொலை முயற்சி திரையுலகிலும் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
PlaBack Singer Kalpana Attempt Suicide