தெலுங்கில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டார் பட கதாநாயகி..!
Superstar heroine to debut in Telugu
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்கா. கடந்த 2010-ஆம் ஆண்டு 'தபாங்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இந்நிலையில், சோனாக்சி சின்கா தெலுங்கில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் கல்யாண் இயக்கி வரும் படம் 'ஜடதாரா'. இப்படத்தில் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இதில், கதாநாயகியாக பாலிவுட் நடிகை சோனாக்சி சின்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. மேலும், இந்த 'ஜடதாரா' படத்தின் படம்பிடிப்பில் வருகிற 08-ஆம் தேதி சோனாக்சி இணைவார் என்றும் கூறப்படுகிறது.

சோனாக்ஷி ஏழு ஆண்டுகளாக காதலித்த தனது நண்பரான ஜாகீர் இக்பாலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தனது காதல் திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசிய சோனாக்ஷி, "நாங்கள் மத வேறுபாட்டை எப்போதும் கருதியதில்லை. இருவரும் விரும்பியே காதலித்து திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் என் மீது அவரது மதத்தை திணிக்கவில்லை. நானும் என் மதத்தை அவர் மீது திணிக்கவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ''நாங்கள் மதம் பற்றி எதுவும் விவாதித்ததில்லை. இருவரும் பரஸ்பரம் கலாசாரத்தை சமமாக பாராட்டுகிறோம். இருவரின் வீட்டிலும் சில மாறுதலான மரபுகளைப் பின்பற்றுவதுண்டு'' என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ''என் தீபாவளி பூஜையில் என் கணவர் அமர்வதும், நான் அவரின் நியாஸில் அமர்வதும் சகஜம். நான் என் கணவர் மற்றும் அவரின் குடும்ப கலாசாரத்தை மதிப்பது போல், அவர் என்னையும் எனது குடும்ப கலாச்சாரத்தையும் மதிக்கிறார். நானும் என் கணவரும் வெவ்வேறு மதத்தைப் பின்பற்றினோம். ஆனால், மதம் மாறாமல் சிறப்பாக திருமணம் செய்து கொண்டோம்." என்று கூறியுள்ள,ஐ குறிப்பிடத்தக்கது.
English Summary
Superstar heroine to debut in Telugu