நெல்லை ரவுடி வைகுண்டம் கொலை வழக்கு; ஒருவருக்கு தூக்கு தண்டனை : 04 பேருக்கு ஆயுள் தண்டனை..!
Nellai Rowdy Vaikundam Murder Case One sentenced to death: 04 people sentenced to life imprisonment
நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி வைகுண்டம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு தூக்குத்தண்டனையும், 04 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலியை அடுத்துள்ள பாளையஞ் செட்டிகுளத்தை சேர்ந்தவர் 45 வயதான வைகுண்டம். இவர் மீது 05 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில், ஊராட்சி தேர்தலில் மோதல், ஒரே சமூகத்தினர் இடையே நடந்த கொலைகள் மற்றும் வெட்டு குத்து என வழக்குகளிலும் இவர் சம்பந்தப்பட்டிருந்தார்.

ரவுடி வைகுண்டம் தொடர்புடைய ஒரு வழக்கில் கடந்த 2022 மார்ச் 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி சொல்ல இருந்த நிலையில் இவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
வைகுண்டம் நீதிமன்றில் சாட்சி கூறினால் வழக்கில் தண்டனை கிடைக்கலாம் என அவரை கொலை செய்ய திட்டம் போட்டுட்டுள்ளனர். கொலை நடந்த அன்று காலை வைகுண்டம் அங்குள்ள கால்வாயில் குளிக்க சென்ற போது அவரை குறித்த கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேஷ் குமார், முதல் குற்றவாளியான செல்வராஜுக்கு தூக்குத்தண்டனை விதித்துள்ளார். அத்துடன், அந்தோணி பிரபாகர், அருள் பிலிப், ஆண்டோ நல்லையா, பாபு அலெக்ஸாண்டர் ஆகிய 04 பேருக்கு ஆயுள் தண்டனையும், ராஜன், செல்வ லீலா, ஜாக்குலின் ஆகியோருக்கு இரண்டு மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்த்துள்ளார்.
இரு தரப்பினர் இடையே நடந்த மோதல்களில் தண்டனை வழங்கப்பட்டதால் திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Nellai Rowdy Vaikundam Murder Case One sentenced to death: 04 people sentenced to life imprisonment