#BREAKING || நெல்லை - குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி.! கூட்டணியை முதுகில் குத்தி வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள்.!
THISAIYANVILAI ADMK WIN DMK LOS
நெல்லை : திசையன்விளை பேரூராட்சி தலைவர் பதவிக்கு அதிமுகவின் ஜான்சிராணி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக, அதிமுக தலா 9 வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கூட்டணியை முதுகில் குத்தி வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் :
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் குமார் போட்டியிட்டு இருந்தார்.
தற்போது மறைமுக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்ரமணியன் வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், கடலூர் : மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வேல்முருகனுக்கு 7 வாக்குகள் மட்டுமே கிடைத்த நிலையில், திமுகவின் சம்சாத் பேகம் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கூட்டணிக் கட்சிக்கு திமுக துரோகம் செய்துவிட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 கவுன்சிலர்களின் 23 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக கூட்டணியில் அறிவிக்கப்பட்ட விசிக வேட்பாளர் கிரிஜா திருமாறன் வெறும் மூன்று வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார்.
English Summary
THISAIYANVILAI ADMK WIN DMK LOS