மத்திய அமைச்சரவையில் மூன்று தமிழர்கள்.. யார் யார் என்று தெரியுமா? - Seithipunal
Seithipunal



கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியாகின. முன்னதாக இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணியும், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் நேரடியாக மோதின.

மேலும் இதில் பாஜக தனித்து 240 இடங்களிலும், காங்கிரஸ் தனித்து 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

இன்று மாலை பிரதமர் மோடி 3வது முறையாக குடியரசுத் தலைவர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மத்திய அமைச்சர்கள் எல். முருகன், நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேற்கண்ட இவர்கள் மூன்று பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக தேர்தல் முடிவு வெளியான பிறகு, அண்ணாமலை டெல்லி சென்றதும் அனைவருக்கும் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three Tamilians As Ministers in Parliament


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->