#தமிழகம் || கோவில் திருவிழா தேரோட்டத்தில் இருதரப்பு மோதல்., தடியடி, பதற்றம், போலீஸ் குவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது முத்துமாரியம்மன் கோவில். 

இந்த கோவிலில் கடந்த மொன்று நாட்களாக விழா நடந்து வந்த நிலையில், விழாவின் ஒருபகுதியாக தேரோட்டம் நடைபெற இருந்தது. 

இந்த தேரோட்டம் நடத்துவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இதன் காரணமாக சுண்டக்காம்பாளையம் கிராத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக ஒருவித பதற்றமான சூழ்நிலை சுண்டக்காம்பாளையம் கிராத்தில் நிலவி வருகிறது. உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழிவேல், வட்டாட்சியர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் இரு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தியும், மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

இதில், நேற்று தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மேலும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்த கோவிலை பூட்டி வைத்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupur temple clash


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->