அதிமுகவுக்கு தாவும் யுவராஜ்? ஈ.பி.எஸ் உடன் திடீர் சந்திப்பு.!!
TMC youth wing president yuvaraj met EPS
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை சந்திக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பதை என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தது.
அந்த ஆலோசனையில் பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய ஊழலில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது என ஜி.கே வாசன் முடிவெடுத்து அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக அதிருப்தியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்த யுவராஜ் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
யுவராஜ் அதிமுகவில் இணையவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் மரியாதை நிமித்தமாக மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி சந்தித்ததாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
TMC youth wing president yuvaraj met EPS