#இடஒதுக்கீடு || தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டமான வரலாறு.!
TN 69 PERCENTAGE RESERVATION
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டமான வரலாறு குறித்து டிஎன்பிஎஸ்சி வலைத்தளத்தில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
1951 - தமிழ்நாட்டில் நடந்த தொடர் போராட்டங்களால் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.
1951 - குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு 41% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. (Bc:25%, SC:16%)
1971 - இட ஒதுக்கீட்டை 49% உயர்த்தினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. (Bc:31%, SC:18%)
1979 - பொருளாதார இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர்.
1980 - பொருளாதார இட ஒதுக்கீடு முடிவைக் கைவிட்டு இட ஒதுக்கீடு அளவை 68% ஆக உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.
1989 - MBC பிரிவு உருவாக்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. (பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் வன்னியர் இன மக்கள் மட்டும் நடத்திய போராட்டத்தில், 22 வன்னியர்களின் உயிர்தியாகத்தின் பலனாக MBC: 20% கிடைத்தது)
1989 - பழங்குடியினருக்கு 1% இட ஒதுக்கீடு அறிவிக்கட்டு, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டின் அளவை 69% ஆக உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி
1992 - இட ஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது என உச்சீதிமன்றம் தீர்ப்பு.
1993 - 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்ட முன் வடிவை சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அறிமுகம் செய்தார்.
1994 - தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த 69% இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப் பட்டது.
தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை:
BC: 26.5%
BCM: 3.5%
MBC: 20%
SC: 18%
(SC:15% + SCA:3% = 18%)
ST: 1%
Total = 69%
https://threadreaderapp.com/thread/1489448190537789444.html
English Summary
TN 69 PERCENTAGE RESERVATION