தமிழக அரசுக்கு நெருக்கடி, கலவரம், வன்முறை, கூலிப்படை., சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.! - Seithipunal
Seithipunal


எந்த சூழலிலும் போராட்டங்களில் துப்பாக்கிச்சூடு என்பது திமுக ஆட்சியில் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசினார். அதில்,

"தமிழகத்தில் கூலிப்படைகள் விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும். கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை. 

அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வன்முறை பேச்சுக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை. ஓரிரு சம்பவங்களை வைத்து காவல்துறையை விமர்சிக்க வேண்டாம்; காவலர்கள் மீது அரசுக்கு அக்கறை உள்ளது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும். காவல்துறையினர் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும். காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும்.

திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை.

உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும் சரியாக செயல்படும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly cm stalin say about tn law and order issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->