DyCM உதயநிதிக்கு என்ன ஆச்சு? சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
TN Assembly DMK MK Stalin DyCM Udhay Health
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது துறைக்கு உட்பட்ட மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார்.
அதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் உள்ள இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை & சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கான மானிய கோரிக்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
உதயநிதிக்கு என்ன ஆச்சு? ஏன் சட்டசபை வரவில்லை?
அப்போது முதல்வர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில், நேற்று, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடல்நலக்குறைவுடன் இருந்தபோதும் சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்றார்.
இன்று, உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், மருத்துவர்கள் கடுமையான ஓய்வு அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர். எனவே, அவருக்குப் பதிலாக மானியக் கோரிக்கையை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று விளக்கமளித்தார்.
English Summary
TN Assembly DMK MK Stalin DyCM Udhay Health