இனி தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசு பணிகளில் சேர முடியாது - சட்டமன்றத்தில் அதிரடி மசோதா!
TN Assembly New Bill for Tamil Govt Jobs
கடந்த 9-ந்தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதம் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், இன்று ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார்.
தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக இந்த சட்ட திருத்த மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம், தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்று பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும், தமிழகத்தின் அனைத்து அரசு துறைகளிலும், மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த 100 சதவீத இளைஞர்களை கொண்டே ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்யப்படுகிறது.
English Summary
TN Assembly New Bill for Tamil Govt Jobs