#BREAKING:: அடுத்தடுத்து திருப்பங்கள்.. ஓபிஎஸ் உடன் அண்ணாமலை சந்திக்க திட்டம்..!!
TN BJP leaders planning to meet ops
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில் பிரதான அதிமுக கூட்டணி கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.
ஆனால் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் நேற்று இரவு டெல்லியில் இருந்து திரும்பிய நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி மற்றும் அண்ணாமலை இன்று காலை திடீரென அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பாஜக நிர்வாகிகள் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி ஆகியோர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் உள்ள பசுமைச்வழிச்சாலையில் உள்ள இல்லத்திற்கே சென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி ஆகியோர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை அண்ணா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ள நிலையில் அதன் பிறகு பாஜக தலைவர்களுடனான சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக நிர்வாகிகளின் அடுத்தடுத்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
TN BJP leaders planning to meet ops