இனி ரூ,15,625 சம்பளம்: வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!
TN Forest Anti Poaching Watchers Salary Hike
தமிழ்நாட்டில் வனத்துறையின் கீழ் செயல்படும் வேட்டைத் தடுப்புக் காவலர்களின் மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
12,500 ரூபாயிலிருந்து 15,625 ரூபாயாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு மூலம் 669 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு கோரி வந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களின் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.
இந்த அறிவிப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TN Forest Anti Poaching Watchers Salary Hike