திருச்சி SRM ஹோட்டல் விவகாரத்தில் விளக்கம் அளித்த தமிழக சுற்றுலாத் துறை..! - Seithipunal
Seithipunal


திருச்சியில் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர் குத்தகைக்கு எடுத்து அங்கு SRM என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டலை நடத்தி வந்தார். இந்த இடத்தில் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தம் ஜூன் 13ம் தேதியன்று முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஹோட்டலை காலி செய்யுமாறு வலியுறுத்திய போது, அங்கு இருதரப்புக்கும் கைகலப்பு வரை சென்றுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் SRM ஹோட்டல் நிறுவனத்திற்கு 30 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் 14.06.1994 அன்று குத்தகைக்கு விடப்பட்டது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் ஜூன் 13ம் தேதி முடிவடைந்தது. இந்த நிலத்திற்கு வருடாந்திர குத்தகை தொகை 30 ஆண்டுகளுக்கும் சேர்த்து 47 கோடியே 93 லட்சத்து 85 ஆயிரத்து 941 என்று கணக்கிடப் பட்டுள்ளது.

இந்நிலையில் குத்தகைதாரர் 9 கோடியே 8 லட்சத்து 20 ஆயிரத்து 104 ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார். மீதமுள்ள 38 கோடியே 85 லட்சத்து 65 ஆயிரத்து 837 ரூபாயை குத்தகைதாரர் செலுத்தாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அந்த நிலத்தில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். 

இதையடுத்து குத்தகை காலம் முடிந்ததால் தமிழக சுற்றுலாத் துறை மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Tourist Department Explained in SRM Hotel Issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->