நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல்.. தமிழக பாஜக நிர்வாகி பேச்சு..!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தை அடுத்த சாத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோலப் போட்டியில் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்ஸி போன்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். அப்பொழுது பேசிய அவர் "பாஜக எப்பொழுதும் பொதுமக்களுக்கு வழங்கும் கட்சியாக இருந்து வருகிறது. திமுகவைப் போல மக்களிடமிருந்து பறிக்கும் கட்சியாக இருப்பதில்லை.

பாஜக எப்பொழுதும் துணிவை மட்டுமே நம்பி இருக்கிறது. திமுகவைப் போல வாரிசுகளை நம்பி இல்லை. போகி பண்டிகையான இன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நோக்கில் உறுதிமொழி ஏற்க வேண்டும். புதியனவற்றிற்கு பொங்கல் வைத்து வழிபடுவது போல பழையனவற்றிற்கு பொங்கல் வைத்து வழி அனுப்ப வேண்டும்.

எனவே இப்பொழுது திமுகவிற்கு நாம் பொங்கல் வைத்து உறுதிமொழி ஏற்க வேண்டும். எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடைபெறும். இதனால் திமுக அதன் ஆட்சி செய்யும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது" என பேசி உள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNBJP executive speck parliament election along with assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->