பாஜகவுக்கு சிக்கல்! சுழற்றி அடிக்கும் ஆருத்ரா மோசடி! ஆர்.கே சுரேஷ்க்கு துபாயில் செக்! - Seithipunal
Seithipunal


ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் தங்கத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் 2500 கோடி ரூபாய் மோசடி வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆருத்ரா நிறுவனத்தின் 13 முக்கிய நிர்வாகிகளை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழிக்கு தொடர்புள்ள சிலரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.

இந்த வழக்கில் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அவர் சில கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இந்த தகவல் ஆருத்ரா நிறுவனத்தில் பணியாற்றிய ரூசோ என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் தான் ஆர்.கே சுரேஷுக்கு மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆரோக்கிய வழக்கு தொடர்பாக ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து ஆர்.கே சுரேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவதில் இருந்து விலக்கு வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆர்.கே சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

மேலும் பாஜக நிர்வாகியான ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கையும் ஆருத்ரா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரூசோவின் வங்கி கணக்கையும் ஆய்வு செய்தபோது பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்குகள் முடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆர்.கே சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகாமல் துபாயில் பதுங்கி உள்ளதால் அவருடைய சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் துபாயில் உள்ள ஆர்.கே சுரேஷை அந்நாட்டு அரசுடன் பரஸ்பர சட்ட நடவடிக்கையின் மூலம் தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு அழைத்து வரவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக தென் சென்னை பாஜக மாவட்டத் தலைவர் காளிதாஸ் மற்றும் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஜோதிகுமார் ஆகியோர் வீடுகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் ஆர்.கே சுரேஷ் சொத்துக்கள் முடக்கப்படுவது தொடர்பான தகவல் வெளியாகி பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPolice plan to freeze RKSuresh assets in Aruthra case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->