இன்று ஜனநாயகத்தின் தீர்ப்பு நாள்!...வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம் - பிரியங்கா காந்தி!
Today is the judgment day of democracy let join hands for the future of wayanad priyanka gandhi
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணிவரை பொதுமக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜ.க சார்பில் நவ்யா ஹரிதாஸ் களம் காண்கின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், வயநாட்டில் உள்ள என் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் இதயப்பூர்வமான நன்றி. இன்று ஜனநாயகத்தின் தீர்ப்பு நாள். நீங்கள் அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்களின் பொன்னான சம்மத உரிமையைப் பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். வாக்கு மூலம் நீங்கள் எடுக்கும் நிலைப்பாடுதான் நமது ஜனநாயகத்தின் பலம். வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம் என்று கூறியுள்ளார்.
English Summary
Today is the judgment day of democracy let join hands for the future of wayanad priyanka gandhi