கே.ஜி.எப் நடிகரின் அடுத்த படக்குழு மீது பரபரப்பு வழக்குப்பதிவு!....திரைக்கு வருமா டாக்ஸிக்? - Seithipunal
Seithipunal



இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1 மற்றும் 2-ம் பாகம் உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் யாஷ், தற்போது தனது 19-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் 19-வது படமான டாக்ஸிக் படத்தினை, பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீது மோகன்தாஸ், தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்ஸிக் படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் நிலையில்,  கேவிஎன் புரோடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள வனத்துறை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்டிருந்தது சாட்டிலைட் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், அனுமதி பெறாமல் மரங்களை திட்டியதற்காக டாக்ஸிக் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் 2025-ம் ஆண்டு  ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kgf actor next film production sensational case filed toxic will hit the screen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->