அமெரிக்காவில் அதிகார மாற்றம்!...ஜோ பைடனுடன் ட்ரம்ப் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலில், 538 இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் 248 வாக்குகள் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக  ட்ரம்ப் பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, ட்ரம்பிற்கு தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாழ்த்து தெரிவித்து இருந்த நிலையில், அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு  அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், புதிய அதிபராக  தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்பும் நேற்று சந்தித்தனர்.  அப்போது,  ஜோ பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்தார். பின்னர், அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று பைடன் கூறியுள்ளார்.

மேலும், இருவரும் அதிகார மாற்றம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விவாதித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Change of power in america trump meeting with joe biden


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->