அனைத்து உயிர்களுக்கும் மரண எச்சரிக்கை!...உலகை உலுக்கிய சத்குரு! - Seithipunal
Seithipunal


ஐ.நா சபை சார்பில், அசர்பைஜான் நாட்டில் கடந்த 11-ம் தேதி பருவநிலை உச்சி மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.  

இந்த நிலையில்,  ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இந்த மாநாட்டில் பேசியதாவது, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்றும், இந்த பூமியின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களும் உயிர்ப்போடு இருப்பதில்தான் இருக்கிறது என்று கூறினார்.

மேலும், நுண்ணுயிர், பூச்சி, புழு மற்ற அனைத்து சிறிய உயிர்களும் வலிமையாக வாழவில்லை என்றால், நாம் வலிமையாக வாழ முடியாது என்றும், பூமியில் உள்ள உயிரினங்களில் 60 சதவீதத்திற்கும் மேல் மண்ணுக்கு அடியில் உள்ளதாகவும், மேலும் 95 சதவீத உயிர்கள் மண் மேல் செழித்து வளர்கின்றன என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  நம் அனைவருக்கும் அடித்தளமாக உள்ள நுண்ணுலாம் அழிந்து வருகின்றன என்றும், இது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை என்று கூறினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death warning to all living beings sathguru who shook the world


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->