தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இன்று தேர்வாக வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


தேசியவாத காங்கிரஸின் புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று கமிட்டி கூட்டம் நடக்கிறது.

தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்ய சரத்பவரால் நியமிக்கப்பட்ட கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சரத் பவர் பதவி நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும், சரத்பவார் பதவி விலகல் முடிவை திரும்ப பெற சம்மதிக்காவிட்டால் புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி, அந்தப் பதவிக்கு தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சரத்பவாரின் அண்ணன் மகனும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார் மற்றும் மேலும் சிலரும் கட்சித் தலைவர் போட்டியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today possible to select NCP new leader


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->