டிராக்டர் டிப்பர் பதிவு கட்டாயமில்லை., முக்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் உடன் இழுத்து செல்லப்படும் டிரைலர் (டிப்பர்) வண்டிக்கு மத்திய அரசின் ஒப்புதல் அவசியம் இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் இணையதளத்தில் ஒப்புதல் பெறாமலே டிராக்டர் டிப்பர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

டிராக்டர் டிப்பரை பதிவு செய்யும் முன்பாக, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிராக, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த டிராக்டர் டிப்பர் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் உடன் இழுத்து செல்லப்படும் டிரைலர் (டிப்பர்) வண்டிக்கு மத்திய அரசின் இணையதளத்தில் ஒப்புதல் அவசியம் இல்லை என்று, தமிழக போக்குவரத்துத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மோட்டார் வாகன இயந்திரத்தால் இயங்கும் டிராக்டர் மட்டுமே பதிவு கட்டாயம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிராக்டர் மூலம் இழுத்துச்செல்லப்படும் டிரைலரை மோட்டார் வாகனமாக கருத முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், டிராக்டர் டிப்பர் உற்பத்தி செய்யும் நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கையும் முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tractor Trailer case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->