திமுக எம்பி திருச்சி சிவாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு.. டெல்லி மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ஆர் எம் எல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Siva Admitted to Delhi Hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->