ஒரே கையெழுத்துல., ஸ்டாலின்-ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்த டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தெரிவிக்கையில்,"மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி வார்டு வாரியாக திமுக வெற்றி பெற மக்கள் அனுமதித்தார்கள் என்றால்., மிகப்பெரிய அழிவில் முடியும். இதனை உணர்ந்து இந்த தேர்தலில் நல்லவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். 

காசுக்காக வாக்களிக்காமல், நல்ல வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நிச்சயமாக நல்ல வேட்பாளர்களை வாய்ப்பு தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட செய்திருக்கிறோம். அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

எங்கள் வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருக்கின்றனர். அனைத்தும் முடிந்த பிறகு எந்த எவ்வளவு இடங்களில் போட்டியிடுகிறது என்பதை நாங்கள் வெளியிடலாம் என்று இருக்கிறோம்.

எடப்பாடியை பற்றி பாஜக காலதாமதமாக புரிந்து கொண்டுள்ளார்கள். இவர்கள் முன் முன்பே சுதாரித்து இருந்தால் ஒரு முறைகேடான ஒரு ஆட்சியை தடுத்திருக்கலாம் என்பதுதான் என்னுடைய கருத்து.

தமிழகத்திற்கு இந்தியாவில் எப்போதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக காமராஜர், பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே தமிழகத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. 

அரசியலுக்காக பேசப்படுவதாக நிறைய விஷயங்கள் உண்டு. ராகுல் காந்தி தமிழர் என்று சொன்னதை நான் வரவேற்கிறேன். 

அவர் ஒரு இந்தியர்., தமிழர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டோட நட்புறவை பெறுவது தவறல்ல. ஆனால், இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் - திமுக தானே.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை நீக்கி விடுவேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். அதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran say about rahulgandhi tamilan issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->