ஆளுங்கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கடத்தல் நடக்குமா? கிடுக்குப்புடி போடும் டிடிவி தினகரன்.!
ttv dhinakaran say about ration shop smuggling
ரேஷன் அரிசி கடத்தல் குறித்து, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவின் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"தமிழ்நாட்டு ரேஷன் அரிசி ஆந்திரா வழியாக கர்நாடகாவிற்கு பெருமளவு கடத்தப்படுகிறது என்ற ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களின் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/ttv100.jpg)
ஏழை, எளிய மக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்கு புதுப்புது கட்டுப்பாடுகளை விதிக்கும் இவர்கள், தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக கடத்தப்படுவதைத் தடுக்காதது ஏன்?
வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நிகழ்கிறது என்றால் ஆளுங்கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்திருக்கிறது.
எனவே, திரு.சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள ரேஷன் அரிசி கடத்தல் குறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் உரிய விளக்கமளிப்பதுடன், அப்படி நடப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dhinakaran say about ration shop smuggling