நம்முடைய நாட்டினை வல்லரசாக உயர்த்துவதற்கு உழைத்திடுவோம் - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரத்தின் பவள விழா நாளில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நெடிய இந்திய விடுதலைப் போராட்டத்தில் லட்சோப லட்சம் பேரின் உயிர்த்தியாகமே நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க காரணமாக அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் பூட்டிய அடிமை விலங்கொடிக்க ரத்தம் சிந்திய அந்த மாவீரர்களை இந்த நன்னாளில் மனதார நினைத்து வணங்கிடுவோம்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முழுமையான விடுதலை உணர்வோடு வாழ்வதில்தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது என்பதை சுதந்திர தின பவள விழா நாளில் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம், சிறந்த கல்வி, சிறப்பான பொருளாதாரமே தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியம். எனவே, அதனை நோக்கி திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டிய கடமை நம்முடைய அரசுகளுக்கு இருக்கிறது.

அதனை சாத்தியப்படுத்துவதற்கு சாதி, மத, இனப் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்காமல் விடுதலைப் போராட்டத்தின்போது ஒன்றுபட்டு நின்றதைப் போலவே, இந்திய திருநாட்டின் உயர்வுக்காகவும் ஒற்றுமையோடு உழைத்திடுவோம். இந்த தேசத்தின் உரிமைக்கான விடுதலைப் போராட்டம் முதன்முறையாக தொடங்கிய இடம் தமிழ் மண்தான். 

அதுவே ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக அமைந்தது. அந்த உணர்வோடும், உரிமையோடும் தமிழனாக, இந்தியனாக பெருமிதம் கொள்வோம். எல்லாவற்றிலும் தேசப்பற்றோடு செயல்பட்டு நம்முடைய நாட்டினை வல்லரசாக உயர்த்துவதற்கு உழைத்திடுவோம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Wish IndependenceDay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->