எடப்பாடி செய்த சம்பவத்திற்கு டிடிவி தினகரன் திடீர் ஆதரவு! அதிர்ச்சியில் திமுக!! - Seithipunal
Seithipunal


கோவை குண்டுவெடிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் நீண்ட நாட்களாக தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பட்ட மக்களும், இஸ்லாமிய அமைப்புகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். 

மு.க ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளிலும் திமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும் இஸ்லாமிய கைதிகள் விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதற்கு தொடர்பான சிறப்பு கவனத்திற்கு தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். 

அதன் மீது நடைபெற்ற விவாதத்தின் போது தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதை ஏற்க மறுதாது எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்ப இரு தரப்பினருக்கும் இடையே சட்டப்பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் தமிழக அரசு இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என குரல் எழுப்ப  தொடங்கியுள்ளன.

அதன்படி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பக்கத்தில் "நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சிறைவாசிகளின் விடுதலைக்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் அளிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளையொட்டி 20 இஸ்லாமியர்கள் உட்பட 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் அவர்கள் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

அரசின் பரிந்துரையை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்ததுடன் தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் கொடுத்து 49 சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான ஒப்புதலைப் பெறுவதோடு, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.ஆதிநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என பதிலளித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக தினகரன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் திமுக தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV support EPS resolution regarding Muslim prisoners release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->