தமிழக, மத்திய அரசுக்கு எதிராக தவெக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானங்கள்!
TVK General committee DMK BJP
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையின் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 2,500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் காலை முதல் மண்டபத்திற்கு வரத் தொடங்க, காலை 7.30 மணி முதல் 12 கவுண்டர்களின் வழியாக அவர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் தங்களுக்கே ஒதுக்கப்பட்ட கவுண்டர்களில் பதிவு செய்தனர்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதைக் கொண்டு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கூட்டம் தொடங்கும் முன், கட்சியின் கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டு, தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள், மேலும் கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள்:
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – இருமொழி கொள்கையே கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக – ரூ.1000 கோடி முறைகேடு குறித்து முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு – சமீபத்தில் சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கை சரிசெய்ய, அரசு தனியான கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தல்.
பரந்தூர் விமான நிலையம் – விவசாயிகளை பாதிக்கக்கூடாது என்பதால் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்பதும் தீர்மானங்களில் ஒன்று.
இதையடுத்து, பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, கூட்டத்துக்கு முறையாக நிறைவு காணப்பட்டது.
English Summary
TVK General committee DMK BJP