பவுர்ணமியில் கட்சிக் கொடியை பறக்க விட்ட த.வெ.க தலைவர் விஜய்.!
tvk leader vijay hoisting party flag in panaiyur office
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். இதையடுத்து கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டார். இதற்காக புதிய செயலியையும் உருவாக்கினார்.
இப்படி அடுத்தடுத்து கட்சி வேலைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த நடிகர் விஜய் கட்சியின் கொள்கை அறிவிப்பு மாநாடு, செப்டம்பரில் நடக்க உள்ளதாக அறிவித்தார். மேலும், விரைவில் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், த. வெ. க தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தன் கட்சி தலைமை அலுவலகத்தில், பவுர்ணமி நாளான நேற்று, கட்சி கொடியை கம்பத்தில் ஏற்றி, அழகுபார்த்துள்ளார். இந்தக் கொடி நாளை மறுதினம் வெளியிடப்படும்.
மஞ்சள் நிறத்திலான அந்த கொடியில், விஜயின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்திற்கு, வெள்ளை நிறத்தில், அவரது புகைப்படத்துடன் கூடிய கொடி பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
English Summary
tvk leader vijay hoisting party flag in panaiyur office