எங்க போனார் விஜய்? 12 மணி நேரமாக தொடர் விமர்சனம்! சற்றுமுன் விஜய் போட்ட டிவிட்!
TVK Leader vijay say about Devar Jayanti guru pooja
தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய கொள்கைகளைக் கொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியவரும், மக்கள் நலனுக்காக அயராது பாடுபட்டவரும், ஜாதி, மத பேதங்கள் கடந்து மக்களின் பெருமரியாதையைப் பெற்றவருமான தெய்வீகத்
திருமகனார் என்று போற்றப்படும் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று.
இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரின் சிலைக்கு மாலி அணிவித்து, அவரின் நினைவிடத்தில் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 12 மணி நேரமாக ஒரு டிவிட் கூட போடவில்லையே.. எங்கே போனார் அவர்? நேரில் பசும்பொன் வருகிறாரா என்று பல்வேறு தரப்பினரும் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், சற்றுமுன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர்.
மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர்.
தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Leader vijay say about Devar Jayanti guru pooja