திருமாவுக்கு திமுக அழுத்தம் கொடுக்கிறது! உங்க கூட்டணி உடையும்! திமுகவிற்கு வார்னிங் கொடுத்த விஜய்!
TVK Vijay DMK MK Stalin Udhay VCK Thirumavalavan
சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் தமிழக வெற்றிக் கலக்கம் தலைவர் விஜய் பேசியதாவது, "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள், அவர்களால் இன்று வர முடியாமல் போய்விட்டது.
அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது.
நான் இப்போது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்றைக்கு நம்மளோட தான் இருக்கிறது. இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் அரசு, வேங்கை வயலில் நடந்த கொடுமைகளில் எதையும் செய்யவில்லை.
இருமாப்புடன் 200 வெல்வோம், என்று எகத்தாளத்தோடு முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்கள் சார்பாக நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அத்தனையும் 2026 இல் மக்களால் மைனஸ் செய்யப்படும்" என்று பேசினார்.
English Summary
TVK Vijay DMK MK Stalin Udhay VCK Thirumavalavan