பார்ட் டைம் அரசியல்வாதி கமலை மதிக்கவே இல்லையா விஜய்? என்ன காரணம்?!
TVK Vijay MNM Kamal NTK Seeman DMK MK Stalin VCK Thirumavalavan
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடு குறித்து சீமான் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
மேலும், நடிகர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் தாக்குதலையும் சீமான் காட்டமாக வெளிப்படுத்தி இருந்தார்.
இருப்பினும் அரசியல் நாகரீகம் கருதி விஜய் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் அண்மையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசனுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
மக்கள் நீதி மையம் கட்சி தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று இருப்பது தான் அதற்கு காரணமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில் திமுக கூட்டணியில் நிரந்தரமாக இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு விஜய் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளாரே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருவேளை கமலஹாசனை ஒரு அரசியல் கட்சி தலைவராக விஜய் கருதவில்லை, அல்லது அவரின் கொள்கை கோட்பாடுகள் கட்சிக்கு விரோதமாக இருக்கலாம் என விஜய் கருதி இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே காலாவதியான, பார்ட் டைம் அரசியல்வாதி என்று கமலஹாசனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், புதிதாக கட்சி தொடங்கிய விஜய் கூட கமல்ஹாசனை மதித்து வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது, கமலஹாசனின் அரசியல் வாழ்வு முடிவு பெற்றதாக சமூக வலைத்தளங்களில் சில தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
TVK Vijay MNM Kamal NTK Seeman DMK MK Stalin VCK Thirumavalavan