முகத்தை மூடும் உடைக்கு தடை - முஸ்லிம்களின் எதிர்ப்பை மீறி சுவிட்சர்லாந்து அரசு அதிரடி! - Seithipunal
Seithipunal


சுவிட்சர்லாந்து அரசு, முகத்தை மூடியபடி (புர்கா, ஹிஜாப்) பொது இடங்களில் வருவதற்கு விதிக்கப்பட்ட தடை நடைமுறையை வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. 

இதை மீறுபவர்கள் ஆயிரம் சுவிஸ் பிராங்க்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே இந்த தடையைச் செயல்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடை விமானங்கள், தூதரகங்கள் மற்றும் தூதரக வளாகங்களில் மட்டுமன்றி, மசூதிகள் மற்றும் பிற புனித தலங்களில் அமல்படுத்தப்படாது என்றும், அவற்றில் மத ரீதியாக முகத்தை மூடி இருப்பது அனுமதிக்கப்படும் என்றும் ஆளும் ஃபெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது. 

தற்போதைய புதிய விதிமுறையின் படி, உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மூட அனுமதி வழங்கப்படும். ஆனால், மத ரீதியாக அல்லது குளிர் போன்ற தட்பவெப்ப நிலைகளுக்காக முகத்தை மூடுதல் அனுமதிக்கப்படாது. சிலர் தங்களை வெளிப்படுத்த விரும்பாத சூழலில், முன் அனுமதியுடன் முகம் மூடுவதற்கு அனுமதி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Switzerland government ban face closed dress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->