காலையிலேயே சிக்கலை உண்டாக்கிய அமரன், திராவிடன் - பாஜக தரப்பில் சரமாரி கேள்வி!
BJP Vanathi and narayanan conmdemn to DMK MK Stalin Udhayanithi Amaran movie issue Dravidian
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விதித்துள்ள செய்திக்குறிப்பில், "பிரித்தாளுவது தான் உங்கள் கட்சிக்கு மிகப் பிடித்த கொள்கையா உதயநிதி ஸ்டாலின் அவர்களே?
இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒதுக்கிவிட்டு தென்னிந்திய மாநிலங்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு பிரிவினைவாத பரிசினை எவ்வித சலனமுமின்றி சிரித்தபடியே பெற்றுக்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும்?
மொத்த இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவை மட்டும் பிரித்தெடுப்பதை இப்படி வெளிப்படையாக ஊக்குவிப்பதற்குத் தான், மூத்த தலைவர்களை விடுத்து வாரிசு அடிப்படையில் உங்களுக்கு துணை முதல்வர் பதவி தூக்கிக் கொடுக்கப்பட்டதா?
இதுபோன்ற பிரிவினைவாத கருத்துக்களை பொதுமேடையில் பரப்புவதற்குத் தான் உங்கள் தந்தை உங்களுக்கு 100/100 மதிப்பெண்கள் வழங்கி மகிழ்ந்தாரா?
“சனாதனத்தை ஒழிப்பேன்” என்று இந்துமக்களின் மனதை நோகடிப்பது, திராவிட நாடு என்ற பிரிவினையைப் புகுத்தி இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைப்பது இதுதான் உங்கள் திராவிடம் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடமா?
பலதரப்பட்ட மக்கள் ஒன்றுகூடி வசிக்கும் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்து கொண்டு இதுபோன்ற பிரித்தாளும் கருத்துக்கு நேரடியாகவே ஆதரவளிக்கும் உங்களின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இமயம் முதல் குமரி வரை இது ஒரே தேசம், நாம் அனைவரும் சமம் என்ற எண்ணம் இந்திய மக்கள் மனதில் ஓங்கி ஒலிக்கும் வரை உங்கள் பிரித்தாளும் எண்ணம் சிறிதும் ஈடேறாது" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அமரன் படம் குறித்த சர்ச்சைக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அமரன் திரைப்படத்தை பார்த்து கண்கலங்கி நெகிழ்ச்சியோடு கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே, அந்தப் படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக திமுக வின் கூட்டணிக் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறுகிறாரே, சில அடிப்படைவாத இயக்கங்கள் கமல்ஹாசனின் வீட்டை முற்றுகையிடுகிறார்களே, அது குறித்து கருத்து தெரிவிப்பீர்களா?
அமரன் படம் குறித்த தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேர்களேயானால், ஜவாஹிருல்லா மற்றும் இதர மத அடிப்படைவாத இயக்கங்களை கண்டிப்பீர்களா? மத உணர்வுகளை தூண்டும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Vanathi and narayanan conmdemn to DMK MK Stalin Udhayanithi Amaran movie issue Dravidian