இருங்க பாய்!!! 2026 சட்டசபை தேர்தலில் இரண்டு கட்சி தான்!!! ஒன்னு த.வெ.க..! இன்னொன்னு தி.மு.க...! - விஜய் அதிரடி
two parties 2026 assembly elections One TVK other DMK Vijay
கட்சி தலைவர் விஜய்,தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,"த.வெ.க. அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும்போது பெண்கள் பாதுகாப்பை 100 % உறுதி செய்வோம்.சட்டம்-ஒழுங்கை முறையாக Strict-ஆக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம்.

அதுவும் எல்லாருக்கும் எளிமையாக கிடைக்கப்படுவதுதான் எங்கள் குறிக்கோள்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம். நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான் நிற்போம்.நம் தமிழ்நாடு விவசாய பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த மண். விவசாயத்திற்கும் இயற்கை வளங்களுக்கும் எதிராக கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் நடவடிக்கையும் கொண்டுவருவதை எங்களால் ஏற்க முடியாது.
எங்கள் மண்ணை, மக்களை பாதிக்கும் விஷயங்களை செயல்படுத்தாதீர்கள் அதை நாங்கள் எதிர்க்கவே செய்வோம். தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.அரசியலின் அடிப்படை பலம் சமரசமற்ற கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் தான். இதுதான் பெரியாரின் சமூக நீதி, காமராஜரின் நேர்மையான நிர்வாகம், அம்பேத்கரின் சம நீதி மற்றும் சம வாய்ப்பு, வேலு நாச்சியாரின் சமூக உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம், நீர்வளத்திற்காகப் போராடிய அஞ்சலை அம்மாள் ஆகியோரை கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.இப்படி ஒரு ஆழமான நம்பிக்கையுடன் வரும் 2026-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் சக்தியின் உதவியுடன் மக்கள் விரும்பும் ஒரு நல்லரசை அமைப்பதில் உறுதியாக இருப்பதால், அதை தடுப்பதற்கு என்று ஒரு சிலர் பகல் கனவு காண்பார்கள் இல்லையா?
அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான். காற்று, மழை, வெயில், இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும். யாரால் தடுக்க முடியும். எல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டது. அப்படித்தான் எம் மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது.அரசியல் சூறாவளியும், தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர். அப்படிதான் எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு ஒரு நாளும் மெய்ப்படாது.வில்லியம் பிளேக்-ன் சில வார்த்தைகள். யார் வேண்டுமானாலும் வருவாங்க.. யார் வேண்டுமானாலும் போவாங்க.. ஆனால் நான் முன்னோக்கி போய்க்கொண்டே இருப்பேன்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்.
என்ற திருக்குறளுக்கேற்ப, ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலை செய்தால் பூவுலகம் முழுவதையும் வேண்டினாலும் அது கைவசப்படும் என்ற திருக்குறளுடன் என் நன்றி உரையை நிறைவு செய்கிறேன்.பார்த்துக்கொண்டே இருங்கள். அடுத்த வருடம் இதுவரை தமிழ்நாடு சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.
TVK vs DMK:
இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று TVK ஒன்று DMK. நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்," என்று தெரிவித்தார்.இன்று தமிழக வெற்றிக்கு கழகப் பொதுக்கூட்டத்தில் அனல் பறக்க உரையாடலை தெறிக்க விட்டார் தலைவர் விஜய்.இதனால் அரங்கமே அதிர்ந்தது.மேலும் கூட்டத்தில் அனைவரும் கோஷமிட்டு தங்களது உறுதுணையாய் கொடுத்தனர்.
English Summary
two parties 2026 assembly elections One TVK other DMK Vijay