தேர்தலில் போட்டியிட்டது மனைவி! பதவியை அனுபவிக்கும் கணவர்! உதயநிதி பிறந்தநாள் விழா பேனரால் சர்ச்சை! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த கண்டமங்கலம் அருகே நவமால் காப்பேர் ஊராட்சியின் தலைவராக மணிமேகலை என்பவர் இருந்து வருகிறார். இவரது கணவர் சின்னத்தம்பி திமுகவின் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளராக இருந்து வருகிறார். ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் சின்னதம்பியின் தலையீடுகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி கட்சியை தொண்டர்கள் ஆங்காங்கே நலத்திட்டங்கள் வழங்கினர். 

இந்த நிலையில் நேற்று நகமால் காப்பேர் ஊராட்சியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கு பெற்று விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக "நலத்திட்ட உதவிகளை வழங்கிய வருகை தரும் எங்கள் வழிகாட்டியே...! எதிர்காலமே...! என்ற வாசகங்களுடன் சின்னத்தம்பி தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேனர் வைத்தார். அந்த பேனரில் தன்னுடைய புகைப்படத்திற்கு கீழ் ஊராட்சி மன்ற தலைவர் எனக் குறிப்பிட்டு பேனர் அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சின்னத்தம்பி பேனர் டிசைன் கொடுத்த இடத்தில் தவறு நடந்துவிட்டது. அதற்கு அதிகமாக செலவாகிவிட்டதால் சரி செய்ய முடியாது என வைத்து விட்டோம். நானும் டிசைன் செய்தவரை திட்டினேன். என்னுடைய மனைவிதான் பஞ்சாயத்தின் எல்லா செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இது பேனர் டிசைனில் ஏற்பட்ட தவறு என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi birthday party banner create controversy in viluppuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->