உதயநிதி உடை விவகாரம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட கோரி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதன்படி, அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா என்றும்,  டி சர்ட் கேஷுவல் உடையா என்றும், அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா என்று பதில்மனு தாக்கல் செய்ய  தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் பிரவீண் சமாதானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மேலும், கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஒரே விவகாரத்துக்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், துணை முதலமைச்சர் உதயநிதியின் டி-சர்ட் தொடர்பான இரு புதிய வழக்குகளை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi dress case madras high court action decision


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->