உக்ரைனில் ஒரு இந்திய குடிமகனும் இருக்க கூடாது, உடனே வெளியேறுங்கள் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து வருகிறது. இந்த படையெடுப்பில் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பின் முடிவில், ரஷ்யாவுடன் இணைய நான்கு மாகாணங்களின் மக்கள் சம்மதம் தெரிவித்து வாக்களித்தனர்.

தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் லூஹான்ஸ்க், கெர்சன், ஸபோரிஷியா மற்றும் டொனாட்ஸ்கில் ஆகிய மாகாணங்களை ரஷ்யாவின் பகுதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் அதிபர் புதின். 

இதற்கிடையே இன்று காலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் நாட்டின் லூஹான்ஸ்க், கெர்சன், ஸபோரிஷியா மற்றும் டொனாட்ஸ்கில் மாகாணங்களில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க உக்ரைன் இராணுவத்தின் தீவிர நடவடிக்கையால் ரஷ்யா போரில் பின்வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்த திட்டமிட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக டிவிட்டர் பக்கத்தில் ரஷ்யா தோல்வி #RussiaIsLosing என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகிவருகிறது. 

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என்று, உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine Russia war indian Embassy announce 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->