தமிழக பட்ஜெட்டில் கூட ‘இந்தியா’ வின் பெயர் இல்லையே? உங்க மலிவான அரசியல் வாதம் - பாஜக பதிலடி! - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் – இரயில்வே திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்? என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பட்ஜெட்டில் கூட ‘இந்தியா’ வின் பெயர் இல்லையே?

அதற்காக, இந்தியாவை புறக்கணித்து விட்டது தமிழக அரசு என்று சொன்னால் அது எந்த அளவுக்கு மலிவு அரசியலோ, அதே அளவு மலிவான அரசியல் தான் உங்களின் வாதம்.

இந்தியாவின் ஓர் அங்கம் தான் தமிழ்நாடு என்பதை உணர மறுக்கும் எண்ணத்தின் விளைவு" என்று முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Budget 2025 MK Stalin DMk BJP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->