BREAKING || மதுராந்தகம் ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை.! என்ன காரணம்? அதிர்ச்சியில் மக்கள்.!
union female councilor commit suicide
மதுராந்தகம் ஒன்றிய கவுன்சிலர் ரேணுகா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சிலாவட்டம் பகுதி, மதுராந்தகம் ஒன்றிய கவுன்சிலர் ரேணுகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒன்றிய கவுன்சிலர் ரேணுகா கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு, 15வது வார்டில் வெற்றி பெற்றவராவார்.
ஒன்றிய கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாகவா? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்றிய பெண் கவுன்சிலர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அம்மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
English Summary
union female councilor commit suicide