37 ஆண்டுகால வரலாற்றை முறியடித்து அரியணை ஏறும் பாஜக.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் பாஜகவினர்.!
uttar pradesh election result bjp leading 2022
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. பகல் 12.30 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பாஜக மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 268 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
இந்த தேர்தல் முன்னிலை நிலவரம் என்பது பாஜகவின் எதிர்க்கட்சிகளுக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது.
மேலும், 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில், கடந்த 37 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சியும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை.
அந்த வரலாற்றை இந்த தேர்தலின் மூலம் பாஜக முறியடித்து இரண்டாவது முறையாக அரியணை என்ற உள்ளது.
மதியம் 12 மணி முன்னிலை நிலவரம் :
பஞ்சாப் (117) : ஆம் ஆத்மி 89, காங்கிரஸ் 15
உத்தரகாண்ட் (70) : பாஜக 44, காங்கிரஸ் 22
உத்தரபிரதேசம் (403) : பாஜக 278, சமாஜ்வாதி 116
கோவா (40) : பாஜக 17, காங் 12, ஆம் ஆத்மி 3, மற்றவை 8
மணிப்பூர் (60) : பாஜக 27, என்பிபி 13, மற்றவை 11, காங் 9
English Summary
uttar pradesh election result bjp leading 2022