பிரதமர் நரேந்திர மோடியின் படம் நீக்கம்.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை.!!
vaccine certificates pm modi photo removal
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியின் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாற்றத்தை கோவின் தளத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் செய்ய உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போதும், கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெறவில்லை. தற்போது தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
vaccine certificates pm modi photo removal