கூட்டணியை பாதிக்கும் வகையில் பேசாமல் இருப்பது நல்லது! - வானதி சீனிவாசன் அட்வைஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களாக கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வரும் நிலையில் கோவை மாவட்டம் ஹைவேஸ் காலனியில் நடைபெற்ற அங்கன்வாடி கட்டடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் தலைவியுமான வானதி சீனிவாசனிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான கருத்து மோத குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் "பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொடுக்கும் மரியாதை என்பது தனிநபருக்கு கொடுக்கும் மரியாதை அல்ல. அது பாஜக என்ற கட்சிக்கு கொடுக்கும் மரியாதை. தேசிய ஜனநாயக கூட்டணியை பாதிக்கும் வகையில் அதிமுக தலைவர்கள் உட்பட யாரும் பேசாமல் இருப்பது நல்லது" என வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi advice better not to speak in way affects alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->