பட்டியலினத்தவரை "முதலமைச்சராக்க" திமுக ஒத்துக் கொள்ளுமா? திருமாவளவனுக்கு வானதி கேள்வி.!! - Seithipunal
Seithipunal


கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைத்து கொடுக்கப்பட்ட இறகு பந்து மைதானத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று திறந்து வைத்து பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டியலின மக்கள் பிரதமராவது குறித்து திருமாவளவன் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வானதி "குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பிற்படுத்த வகுப்பைச் சேர்ந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக உள்ளார். 

திருமாவளவன் ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறார், கூட்டணி வைத்துள்ளார். அவர் கூட்டணி வைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பட்டியலினத்தை சார்ந்தவரை முதலமைச்சராக இருப்பதற்கு ஒத்துக் கொள்ளுமா? குறைந்த பட்சம் கொள்கை அளவிலாவது ஒத்துக்கொள்ளுமா? என்று கேட்டு சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். எங்களால் முதலமைச்சர்களை கொண்டுவர முடியும், ஜனாதிபதி வரை கொண்டு வர முடியும்" என திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi question to Thirumavalavan Will DMK agree to make sc people as cm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->