தாமரையில் போட்டியிட ஓ.பி.எஸ், டி.டி.விக்கு நெருக்கடியா? உடைத்து பேசிய பாஜக.!!
Vanathi said BJP not forced ops ttv contest in Lotus symbol
தமிழக பாஜகவின் மையக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை டி நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவிநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானத்தை சீனிவாசன் தேர்தலில் போட்டியிட உள்ள தொகுதி மற்றும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். பாஜக போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் குறித்தான உத்தேச பட்டியல் வரும் மார்ச் 6ஆம் தேதி டெல்லி தலைமைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அப்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வானதி சீனிவாசன் "எந்தெந்த கட்சிகள் எந்தெந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும், யார் யார் போட்டியிட வேண்டும் என்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும்" என பதில் அளித்துள்ளார்.
English Summary
Vanathi said BJP not forced ops ttv contest in Lotus symbol