இதெல்லாம் மன்னர் பரம்பரைக்கான மனநிலை! ஆதவ் அர்ஜுனாவுக்கு வன்னியரசு பதிலடி! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, தற்போது நடக்கின்ற திமுக ஆட்சி மன்னர் ஆட்சி என்றும், பிறப்பால் இன்னொரு முதலமைச்சர் வந்துவிடக் கூடாது என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். 

இதற்கு திமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் வலுத்த நிலையில், இன்று முதல் ஆறு மாதம் விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு விளக்கம் அளித்து ஆதவ் அர்ஜுனா விடுத்த அறிக்கையில், "தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற  முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். 

குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். 

இந்த மக்களுக்கான அதிகாரத்தைத்  தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில்  அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.

கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு பதில் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 

விடியாதோ வாழ்க்கையென விம்பி துடித்தபடி விவரம் அறியாமல்- தன் விழி கலங்கி நிற்பவனே!

புலராதோ வாழ்க்கையென பொற்கனவு கண்டபடி பொழுதெல்லாம் பாடுபட்டு- தினம் புலம்பி தவிப்பவனே!

அடித்தாலும் உதைத்தாலும் அவமானம் செய்தாலும் ஆத்திரங்கொண்டு எழாமல் மனிதன் என்பதே மறந்து மாற்றானின் கால் பிடித்து தன்மானம் கெட்டு வாழ்கிறாயே!

தானாக விடியுமென்று தவறாக நம்பாதே வீணாக மனம் நொந்து எல்லாம் விதியென்று வெம்பாதே

நீயாக முன் வந்து நெருப்பாக விழி சிவந்து நிலையாக போர் புரிந்தால் -உனக்கு நிச்சயமாய் விடியலுமுண்டு!

நெஞ்சில் துணிச்சலின்றி அஞ்சி ஒடுங்கி கஞ்சி குடிப்பதற்கே கெஞ்சி கிடக்கிறாயே! திருமாவளவன் கவிதையை திருத்தம் செய்து அனுப்பியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vannaiyarasu reply to Aadhav arjuna VCK Thiruma DMK MKStalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->